/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24,099 மனுக்களுக்கு தீர்வு
/
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24,099 மனுக்களுக்கு தீர்வு
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24,099 மனுக்களுக்கு தீர்வு
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 24,099 மனுக்களுக்கு தீர்வு
ADDED : டிச 25, 2024 01:56 AM
கிருஷ்ணகிரி, டிச. 25-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், 24,099 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்தார்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, 'நிறைந்த மனம்' நிகழ்ச்சியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் கிராம புறங்களில் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' 2 கட்டங்களாக நடந்தது. நடத்தப்பட்ட, 96 முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 36,312 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து, தகுதி வாய்ந்த, 24,099 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது,'' என்றார்.