/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மலை கிரிவலப்பாதையில் 260 டன் குப்பை அகற்றம்
/
தி.மலை கிரிவலப்பாதையில் 260 டன் குப்பை அகற்றம்
ADDED : மே 14, 2025 02:15 AM
திருவண்ணாமலை :திருவண்ணாமலையிலுள்ள, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையை சிவனாக பாவிக்கும் பக்தர்கள், பவுர்ணமிதோறும் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். கடந்த, 2 நாட்களாக சித்ரா பவுர்ணமியையொட்டி, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, 14 கி.மீ., சுற்றளவுள்ள அண்ணாமலையார் மலையை வலம் வந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை, 7 மணி நேரம் காத்திருந்து வழிபட்டு சென்றனர்.
அந்த பக்தர்களால் பயன்படுத்தி வீசி சென்ற கழிவுகள் மற்றும், 250க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதால் தட்டு, பேப்பர், பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாட்டில், உள்ளிட்ட கழிவுகள் கிரிவலப்பாதையில் குவிந்திருந்தன. அதை அகற்றும் பணியில், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி ஆகிய மாவ ட்டங்களை சேர்ந்த மாநகரா ட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த, 1,200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், 260 டன் குப்பை அகற்றப்பட்டது. இப்பணியை, மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.