தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உயர்கல்வி ஆர்வத்தை ஏற்படுத்த 2,621 மாணவர்கள் களப்பயணம்

உயர்கல்வி ஆர்வத்தை ஏற்படுத்த 2,621 மாணவர்கள் களப்பயணம்

உயர்கல்வி ஆர்வத்தை ஏற்படுத்த 2,621 மாணவர்கள் களப்பயணம்


ADDED : நவ 25, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; உயர்கல்வி ஆர்வத்தை ஏற்படுத்த, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 2,621 பேர் நேற்று களப்பயணம் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியரிடம், உயர்கல்வி குறித்த ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில், 110 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 5,980 மாணவ, மாணவிகள், 2 நாள் உயர்கல்வி நிறுவனங்களை நேரில் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்லுாரி களப்பயணத்தை, சி.இ.ஓ., மதன்குமார், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார்.அதன்படி நேற்று, அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, 757 பேரும், அரசு பொறியியல் கல்லுாரிக்கு, 466, ஜீனுார் தோட்டக்கலை கல்லுாரிக்கு, 236, தளி தோட்டக்கலை கல்லுாரிக்கு, 662, அதியமான் பொறியியல் கல்லுாரிக்கு, 500 என மொத்தம், 2,621 மாணவ, மாணவியர், உயர்கல்வி நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் உயர் கல்வி வாய்ப்புகள், பாடப்பிரிவுகள், சேர்க்கை நடைமுறை, கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கல்லுாரி களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us