தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : நவ 25, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 20 நாட்களாக மழை பெய்யாத நிலையில், நேற்று முன்தினம் மாலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, கிருஷ்ணகிரியில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில், பகல், 1:00 மணிக்கு, ஒரு மணி நேரம் மழை பெய்தது.

அரை மணி இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டில் கழிவுநீருடன் கலந்து, மழை நீர் சாலையில் ஓடியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். கார்த்திகை தீபத் திருநாளான நேற்று மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பாம்பாறு அணை, 19, கே.ஆர்.பி., அணை, 13.2, தேன்கனிக்கோட்டை, 10, கெலவரப்பள்ளி அணை, தளி தலா, 4, ஓசூர், ஊத்தங்கரை தலா, 3, கிருஷ்ணகிரி, நெடுங்கல் தலா, 2, போச்சம்பள்ளி, 1 என மொத்தம், 61.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

* ஓசூரில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்த தால், பள்ளி, கல்லுாரி சென்ற மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும், மழையில் நனைந்தபடி பயணித்தனர். மதிய நேரத்திலும் ஒரு சில இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. விட்டு, விட்டு மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us