/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் 2,734 பேருக்கு சிகிச்சை: கலெக்டர்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் 2,734 பேருக்கு சிகிச்சை: கலெக்டர்
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் 2,734 பேருக்கு சிகிச்சை: கலெக்டர்
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில் 2,734 பேருக்கு சிகிச்சை: கலெக்டர்
ADDED : அக் 01, 2025 01:56 AM
கிருஷ்ணகிரி:பர்கூரில் நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில், 2,734 பேர் சிகிச்சை பெற்றதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்த பின் கூறியதாவது:
பர்கூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமில், 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், 2,734 நபர்கள் பதிவு செய்து சிகிச்சை பெற்றனர்.
மேலும், இம்மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படுவோர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 29 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் 61 நபர்களுக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கி, 4 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்குவதற்கான அளவுகள் மேற்கொள்ளும் பணிகளை பார்வையிட்டார்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சத்யபாமா, பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் ரவிசங்கர், மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.