/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்ட ஆய்வு கூட்டம்
/
ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்ட ஆய்வு கூட்டம்
ADDED : அக் 01, 2025 01:56 AM
ஓசூர்:ஓசூர் மாநகராட்சியில், ஏரிகளின் நீர்வரத்து ராஜகால்வாய்கள், வார்டுகளில் மழைநீர் வடிகால்கள், 20 பூங்காக்கள் சீரமைப்பு, நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள், 1,025 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக, 125 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு கூட்டம், மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் தலைமையில், மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று நடந்தது. துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கடந்த ஆண்டுகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட, 14 இடங்களில் நிரந்தர தீர்வாக மழைநீர் வடிகால் பணிகள், கூடுதலாக, 3 நீர்நிலைகள் மேம்பாடு பணிகள், 3 இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக, மழைநீர் வடிகால் பணிகள், 7 நீர்நிலைகளில் மேம்பாடு பணிகள், 12 இடங்களில் புதியதாக பூங்காக்கள் அமைக்கும் பணிகள், 707 கோடி ரூபாய் மதிப்பிலும், 3ம் கட்டமாக மழைநீர் வடிகால் பணிகள், கூடுதலாக 6 நீர்நிலைகளில் மேம்பாடு பணிகள், 2 பூங்காக்கள் அமைக்கும் பணிகள், 193 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.