/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆசிரியர் வீட்டில் 62 பவுன் திருட்டு வழக்கில் மேலும் இருவர் கைது
/
ஆசிரியர் வீட்டில் 62 பவுன் திருட்டு வழக்கில் மேலும் இருவர் கைது
ஆசிரியர் வீட்டில் 62 பவுன் திருட்டு வழக்கில் மேலும் இருவர் கைது
ஆசிரியர் வீட்டில் 62 பவுன் திருட்டு வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : அக் 01, 2025 01:57 AM
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 55. இவர், வேலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி தெய்வானை, 43, பாளேகுளி தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இருவரும் கடந்த ஆக., 22-ல் வீட்டை பூட்டி விட்டு, பணிக்கு சென்ற நிலையில், அன்று மாலை, 5:30 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது கேட் மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே பீரோவிலிருந்த, 62 பவுன் நகை திருட்டு போயிருந்தது. நாகரசம்பட்டி போலீசில், பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் தலைமையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இதில் மத்துார் அடுத்த, ஓபிளிகாட்டூரை சேர்ந்த சரவணனை, கடந்த, 5 நாட்களுக்கு முன் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, வடக்குபட்டு கிராமத்தை சேர்ந்த திருமால், 38, மற்றும் ஓபிளிகாட்டூர் சரவணனின் மனைவி சாந்தி, 42, என்பவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 61 பவுன் நகையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.