/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மக்களிடம் பெறப்பட்ட 28,318 மனு
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மக்களிடம் பெறப்பட்ட 28,318 மனு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மக்களிடம் பெறப்பட்ட 28,318 மனு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மக்களிடம் பெறப்பட்ட 28,318 மனு
ADDED : ஆக 01, 2025 01:20 AM
கரூர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை, 28,318 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன.
கரூர் மாநகராட்சி பசுபதிபாளையம், பஞ்சமாதேவி ஆகிய பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.
கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதுவரை, 36 முகாம்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மொத்தம், 28,318 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன.
சில மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. ஒரு சில மனுக்களுக்கு ஒரு வார காலம் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பதிலளிக்கப்படும்.
கூட்டுறவுத்துறை சார்பில், 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, 31.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவி, 4 விவசாயிகளுக்கு, 8.01 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயிர் கடனுதவி, 5 விவசாயிகளுக்கு, 5.10 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, எரிசக்தித் துறை சார்பில் மூவருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணை, வருவாய்த்துறை சார்பில், 20 பேருக்கு இருப்பிட சான்று என மொத்தம், 45 பேருக்கு, 44.71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.