/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி 2,859 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

ADDED : செப் 04, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள், 8ம் நாளாக நேற்று நடந்தது.
போட்டிகளை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, மாவட்ட இறகு பந்து செயலாளர் சராபத் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர்
ராஜகோபால் வரவேற்றார்.
இதில், பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி யில், 1,000 மாணவர்கள், சிலம்பம் போட்டியில், 165 பேர், கால்பந்து போட்டி யில், 900 பேர், கூடைப்பந்து போட்டியில், 432 பேர், மேசைப்பந்து போட்டியில், 150 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அரசு ஊழியர்கள் பிரிவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறகுப்பந்து போட்டியில், 212 பேர் என மொத்தம், 2,859 பேர் பங்கேற்றனர்.
இப்போட்டிகள் கடந்த மாதம், 26ல் துவங்கி வரும், 12 வரை, பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, 5 பிரிவுகளில், 37 விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு, 3,000 ரூபாய், 2ம் பரிசு, 2,000 ரூபாய், 3ம் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்
படுகிறது.