/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகாவிலிருந்து ரூ.2.49 லட்சம் மதிப்பில் டீசல் கடத்திய 3 பேர் கைது
/
கர்நாடகாவிலிருந்து ரூ.2.49 லட்சம் மதிப்பில் டீசல் கடத்திய 3 பேர் கைது
கர்நாடகாவிலிருந்து ரூ.2.49 லட்சம் மதிப்பில் டீசல் கடத்திய 3 பேர் கைது
கர்நாடகாவிலிருந்து ரூ.2.49 லட்சம் மதிப்பில் டீசல் கடத்திய 3 பேர் கைது
ADDED : நவ 07, 2024 05:53 AM
ஓசூர்: கர்நாடகாவில் இருந்து, 2.49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டீசலை கடத்தி வந்த, பிக்கப் வாகன டிரைவர்கள் உட்பட, 3 பேர் கைதாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், கொத்தகொண்டப்பள்ளி டி.வி.எஸ்., சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கர்நாடகாவில் இருந்து, 19 பிளாஸ்டிக் கேன்களில், 71,200 ரூபாய் மதிப்புள்ள, 800 லிட்டர் டீசலை கடத்தியது தெரிந்தது. இதனால், பிக்கப் வாகன டிரைவரான ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்த ரமேஷ், 38, திருவதிம்மனப்பள்ளியை சேர்ந்த மகேஷ், 21, ஆகியோரை கைது செய்து, டீசல் மற்றும் பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசார், கலுகொண்டப்பள்ளி பகுதியில் வாகன சோதனை செய்தபோது, கர்நாடகாவில் இருந்து, 1.78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2,000 லிட்டர் டீசலை பிக்கப் வாகனத்தில் கடத்தியது தெரிந்தது. இதனால், வாகனத்தை ஓட்டி வந்த ஓசூர் அடுத்த அச்செட்டிப்பள்ளி அருகே கோரிபாளையத்தை சேர்ந்த ஜெகன், 23, என்பவரை கைது செய்த போலீசார், 2,000 லிட்டர் டீசல் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.