/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 சட்டசபை தொகுதி ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் அறிக்கை

ADDED : செப் 13, 2025 01:03 AM
ஓசூர், கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரும், ஓசூர் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி ஆலோசனை கூட்டம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், இன்று (செப்., 13) நடக்க உள்ளது. காலை, 9:30 மணிக்கு, வேப்பனஹள்ளி தொகுதிக்கு, சூளகிரியில் உள்ள எஸ்.ஏ.எஸ்., மகாலிலும், ஓசூர் தொகுதிக்கு நண்பகல், 12:00 மணிக்கு, ஓசூர் மீரா மகால் திருமண மண்டபத்திலும், மதியம், 3:00 மணிக்கு தளி தொகுதிக்கு, தேன்கனிக்கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்திலும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் நாளை (செப்., 14) ஓசூர் வருகை தருவது மற்றும் முப்பெரும் விழா, கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலர்கள், ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.