/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கார், பைக்கில் கர்நாடகா மதுபானம் கடத்திய மூவர் கைது
/
கார், பைக்கில் கர்நாடகா மதுபானம் கடத்திய மூவர் கைது
கார், பைக்கில் கர்நாடகா மதுபானம் கடத்திய மூவர் கைது
கார், பைக்கில் கர்நாடகா மதுபானம் கடத்திய மூவர் கைது
ADDED : செப் 13, 2025 01:04 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார், தமிழக எல்லையான கும்ளாபுரம் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநில மதுபானங்களை கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால், பைக்கை ஓட்டி வந்த தளி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி சீனிவாசன், 46, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 7,680 ரூபாய் மதிப்புள்ள, 96 மதுபான பாக்கெட்டுகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, பெங்களூருவிலிருந்து வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்த போது, 425 பாக்கெட் கர்நாடக மாநில மதுபானம் இருந்தன. திருப்பூர் மாவட்டத்திற்கு அவற்றை கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால் காரில் வந்த, திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரமூர்த்தி, 31, மற்றும் முருகன்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார், 30, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.