/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரியில் காரை திருடி கேரளாவில் பிடிபட்ட 3 வட மாநில ஏ.டி.எம்., கொள்ளையர்கள்
/
கி.கிரியில் காரை திருடி கேரளாவில் பிடிபட்ட 3 வட மாநில ஏ.டி.எம்., கொள்ளையர்கள்
கி.கிரியில் காரை திருடி கேரளாவில் பிடிபட்ட 3 வட மாநில ஏ.டி.எம்., கொள்ளையர்கள்
கி.கிரியில் காரை திருடி கேரளாவில் பிடிபட்ட 3 வட மாநில ஏ.டி.எம்., கொள்ளையர்கள்
ADDED : ஜூலை 16, 2025 01:13 AM
கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரியில் காரை திருடிச்சென்று கேரளாவில் பிடிபட்ட, வட மாநிலத்தை சேர்ந்த ஏ.டி.எம்., கொள்ளையர்கள், 3 பேரிடம் கேரளா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணன். கடந்த, 14ல் இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த அவரின் மாருதி இகோ கார் மாயமானது. அவர் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி, கார் அருகே நிற்பதும், சிலர், காரை திருடி அந்த லாரியில் ஏற்றியதும் தெரிந்தது.
விசாரணையில், காரை திருடியவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என்றும், அவர்கள் கிருஷ்ணகிரி டோல்கேட் வழியாக கன்டெய்னரில் கடந்து சென்றதும் தெரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார், மற்ற மாவட்ட போலீசார் மற்றும் அண்டை மாநில போலீசாருக்கு, இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
காரை லாரியில் கடத்திய கும்பல், கோவை வழியாக கேரளா மாநிலத்திற்குள் நுழைந்து பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் சென்றது தெரிந்தது. நேற்று எர்ணாகுளம் அருகே, அந்த கன்டெய்னர் லாரியை பனங்காடு போலீசார் மடக்கினர். லாரிக்குள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அகமத், சாஹித், ராஜஸ்தானை சேர்ந்த சர்குள் ஆகியோர் இருந்தனர். மூவரும் வடமாநில கொள்ளையர்கள் என்பதும், ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்து திருடும் கும்பல் எனவும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைக்க பயன்படுத்தும் காஸ் வெல்டிங், கடப்பாரை மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மூவரையும், போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட காரை, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி போலீசார், அக்காரை மீட்டனர். கைதான, மூவரிடமும் கேரளா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.