ADDED : செப் 02, 2026 05:55 AM
கிருஷ்ணகிரி:குருபரப்பள்ளி
அடுத்த சோமநாதபுரத்தை சேர்ந்தவர் முபாரக், 38, டூவீலர் மெக்கானிக்.
இவரது மகன் ரிகானிடம், முஸ்லிம்பூரை சேர்ந்த முகமது சுகெத், 26,
என்பவர், 'உன் தந்தை மெக்கானிக் மட்டுமல்ல, சட்ட விரோதமாக பணம்
சம்பாதிக்கிறார்' எனக் கூறியுள்ளார்.
இதை ரிகான், தன் தந்தையான
முபாரக்கிடம் தெரிவித்துள்ளார். கடந்த, 23ல் முபாரக் முஸ்லிம்பூர்
அருகே ஈத்கா மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய முகமது சுகெத்திடம்,
முபாரக், கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. முகமது சுகெத்
தரப்பினர், கிரிக்கெட் பேட், ஸ்டம்பால் தாக்கியுள்ளனர். இடுப்பில்
படுகாயம் அடைந்த முபாரக், நேற்று முன்தினம் வேப்பனஹள்ளி போலீசில்
அளித்த புகார் படி, முகமது சுபெத், 26, சகில், 18, முகமது கராமத், 20,
ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
