/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மா.திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க சிறப்பு பயிற்றுனர்களுக்கு 3 நாள் பயிற்சி

ADDED : ஆக 13, 2025 05:29 AM
கிருஷ்ணகிரி: பலவகை மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து, சிறப்பு பயிற்றுனர்களுக்கான, 3 நாள் பயிற்சி கிருஷ்ணகி-ரியில் துவங்கியது.
ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் (மாற்றுத்திறனாளிகள்) மேம்பாட்டிற்கான, சென்னை தேசிய நிறுவனம் சார்பில், கிருஷ்-ணகிரி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவல-கத்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்க-ளுக்கு, மூன்று நாள் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் துவங்கி-யது. சி.இ.ஓ., (பொ) முனிராஜ், உதவி திட்ட அலுவலர் மகேந்-திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், அருண் ஜோதி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேலு, நிப்மெட் மறுவாழ்வு அதிகாரி குருமூர்த்தி, சைகை மொழி பெயர்ப்பாளர் நித்யா ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினர்.இதில், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, வேலுார், சென்னை, கரூர், கடலுார், திருவண்ணாமலை, சேலம், விழுப்-புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 50 சிறப்பு பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். நிப்மெட் இயக்குனர் டாக்டர் நச்சி கேதா ரவுட், துறைத் தலைவர் டாக்டர் சந்தோஷ் கண்ணா மற்றும் மாவட்ட சிறப்பு பயிற்றுனர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தி-ருந்தனர்.