UPDATED : நவ 12, 2026 02:24 AM
ADDED : நவ 12, 2026 01:59 AM

அ நிறம் | அளவு
சூளகிரி: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 45. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தொட்டி டாஸ்மாக் கடையில், விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த, 8ம் தேதி தீபாவாளி நாளில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர், மதுபோதையில், காலி பாட்டிலை வாங்குமாறு கூறி, விற்பனையாளர் சுப்பிரமணியிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் அவரை தாக்கினர். இது தொடர்பாக, சூளகிரி போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். போலீசார் விசாரித்த போது, சூளகிரி அருகே பாத்தக்கோட்டா கிராமத்தை சேர்ந்த நவீன்குமார், 34, மகேஷ், 26, சிவக்குமார், 32, ஆகியோர், விற்பனையாளர் சுப்பிரமணியை தாக்கியது தெரிந்து, 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
