ADDED : ஆக 26, 2024 08:28 AM
ஓசூர்: ஓசூர், சின்ன எலசகிரி பாரதி நகரை சேர்ந்தவர் விக்னேஷ்குமார், 28; கடந்த மாதம், 3 இரவு, 9:00 மணிக்கு, தனது வீட்டின் அருகே பஜாஜ் பல்சர் பைக்கை நிறுத்தியிருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன், 32, என்பவர், ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் கடந்த மாதம், 1 இரவு, 10:00 மணிக்கு நிறுத்தியிருந்த ஹோண்டா டியோ மொபட் திருட்டு போனது.
இச்சம்பவங்கள் தொடர்பாக, சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், ஓசூர் பேடரப்பள்ளி மாரியம்மன் கோவில் அருகே வசிக்கும் யாரப், 27, பாரதியார் நகரை சேர்ந்த அருண், 30, கிருஷ்ணகிரி அருகே கம்மம்பள்ளியை சேர்ந்த கோகுல், 19, போச்சம்பள்ளி அருகே வெலங்காமுடியை சேர்ந்த முரளி, 41, ஆகிய, 4 பேர் பைக்குகளை திருடியது தெரிந்தது. இதையடுத்து, அருண், கோகுல், முரளி ஆகிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள யாரப்பை தேடி வருகின்றனர்.

