/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.10 கோடி ஷூக்கள் திருடிய 3 பேர் கைது
/
ரூ.1.10 கோடி ஷூக்கள் திருடிய 3 பேர் கைது
ADDED : ஜன 04, 2024 01:30 AM

ஓசூர்:கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே செட்டிஹள்ளியில், விலை உயர்ந்த 'ஷூ'க்களை விற்பனை செய்யும் தனியார் ஷோரூம் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஷோரூமிலிருந்து லாரியில் 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 1558 ஜோடி ஷூக்கள், பெங்களூரு அருகே அணுகுண்டனஹள்ளியிலுள்ள குடோனுக்கு லாரி வாயிலாக அனுப்பப்பட்டது. ஷோரூம் டிரைவரான அகமத், 30, லாரியை ஓட்டினார்; ஆனால், குடோனுக்கு லாரி வரவில்லை.
தனியார் ஷோரூம் நிர்வாகம், லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக பார்த்தபோது அந்த லாரி வேறொரு சாலையில் நின்றது தெரிந்தது. அங்கு சென்று பார்த்தபோது ஷூக்களும் டிரைவரும் மாயமானது தெரிந்தது.
அத்திப்பள்ளி போலீசார் விசாரணையில், கர்நாடகா சுபான் பாஷா, 30, சஹீத்துல் ரகுமான், 20, அசாம் மாநிலத்தின் மன்சூர் அலி, 26, ஆகியோர், ஷூக்களை திருடி பதுக்கி வைத்தது தெரிந்தது.
மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த ஷூக்களை கைப்பற்றினர். தலைமறைவான லாரி டிரைவர் அகமத், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.