ADDED : நவ 05, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பி திருடிய 3 பேர் கைது
ஓசூர், நவ. 5-
சென்னை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மோகன், 55. ஓசூர் அருகே நாகொண்டப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பொதுமேலாளராக உள்ளார். இந்நிறுவனத்திற்கு, நாகொண்டப்பள்ளியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக வைக்கப்பட்டிருந்த, 24,000 ரூபாய் மதிப்புள்ள, 250 கிலோ எடை கொண்ட, 14 இரும்பு கம்பிகளை, கடந்த, 2 மாலை, 6:30 மணிக்கு, 3 பேர் கொண்ட கும்பல் காரில் திருடி செல்ல முயன்றது. இதை கவனித்த பொது மேலாளர் மோகன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து, மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். ஓசூர் அருகே சோமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா, 24, சிம்பு, 20, ராஜப்பா, 36, என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரும்பு கம்பிகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

