ADDED : அக் 12, 2024 01:20 AM
வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி
ஓசூர், அக். 12-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் - பேகூர் சாலையில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த, 4 இரவு, 7:30 மணிக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். பேகேப்பள்ளி வி.ஏ.ஓ., கோபு கொடுத்த புகார்படி, ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் மதன்சிங், 45; லாரி கிளீனர். ராயக்கோட்டை - கெலமங்கலம் சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை போர்வெல் லாரியில் சென்றார். சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 40, லாரியை ஓட்டி சென்றார். நல்லுார் அருகே அதிகாலை, 4:00 மணிக்கு சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மதன்சிங், சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் ஜெயப்பிரகாஷ், மற்றொரு டிரைவரான ஒடிசாவை சேர்ந்த, 17 வயது சிறுவன் படுகாயத்துடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அசலாம், 38. கன்டெய்னர் லாரி டிரைனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, தளி - ஓசூர் சாலையில் உளிவீரனப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே லாரியை நிறுத்தி விட்டு, லாரியின் முன்பகுதியில் நின்றிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி, அசலாம் லாரியின் பின்னால் மோதியது. இதில் முன்நோக்கி நகர்ந்த லாரி, அசலாம் மீது மோதியதில் சம்பவ இடத்திலயே பலியானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.