sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சாலை விபத்தில்பெண் உட்பட 3 பேர் பலி

/

வெவ்வேறு சாலை விபத்தில்பெண் உட்பட 3 பேர் பலி

வெவ்வேறு சாலை விபத்தில்பெண் உட்பட 3 பேர் பலி

வெவ்வேறு சாலை விபத்தில்பெண் உட்பட 3 பேர் பலி


ADDED : ஏப் 18, 2025 01:22 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த கேரட்டியை சேர்ந்தவர் மாதையன், 47. மினிடோர் வேன் டிரைவர். கடந்த, 15ல் அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், 42, என்பவரை வேனில் ஏற்றிக் கொண்டு வேலைக்கு சென்று திரும்பினார்.

மாலை, 5:00 மணியளவில் கெண்டகானப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையை சேர்ந்தவர் அசோக்குமார், 27, கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 15ல், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். மாலை, 4:00 மணியளவில் கண்ணு கண்ணன்கொட்டாய் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்ததில் இறந்தார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன்நாத், 45. தற்போது தளியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். கடந்த, 14 இரவு, 8:30 மணியளவில் மூக்கண்டப்பள்ளி அருகே பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் இறந்தார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us