/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சாலை விபத்தில் தொழிலாளி உட்பட 3 பேர் பலி
/
வெவ்வேறு சாலை விபத்தில் தொழிலாளி உட்பட 3 பேர் பலி
ADDED : அக் 17, 2025 01:20 AM
ஓசூர், கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளியை சேர்ந்தவர் முருகன், 45, சலுான் கடை தொழிலாளி. கடந்த, 14 இரவில் ஓசூர் அரசனட்டி அருகே பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
* தேன்கனிக்கோட்டை அடுத்த கவுண்டனுாரை சேர்ந்தவர் மல்லப்பா, 66, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் வெள்ளைசந்தை ஆஞ்சநேயர் கோவில் அருகில், கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் பலியானார். கெலமங்கலம் போலீசார், லாரி டிரைவரான ஆவத்துவாடியை சேர்ந்த முரளி, 28, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த பன்னிஹள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன், 27, பெயின்டர். நேற்று முன்தினம் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். மாலை, 6:15 மணி அளவில், கருக்கன்சாவடி அருகே பாலக்கோடு - காவேரிப்பட்டினம் சாலையில் சென்றபோது எதிரில் வந்த தனியார் பள்ளி பஸ் மோதியதில் பலியானார். காவேரிபட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.