sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருவேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 3 பேர் பலி

/

இருவேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 3 பேர் பலி

இருவேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 3 பேர் பலி

இருவேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 3 பேர் பலி


ADDED : ஜூலை 17, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த சக்கிலிநத்தத்தை சேர்ந்தவர் விஜயன், 49, விவசாயி. இவர், நேற்று முன்தினம் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். மதியம், 3:00 மணியளவில் தபால்மேடு அருகே திருப்பத்துார் - பர்கூர் சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பொலிரோ ஜீப் மோதியதில் பலியானார். பர்கூர் போலீசார்

சடலத்தை மீட்டு, ஜீப்பை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜெயந்தி நகரை சேர்ந்த தினேஷ், 49, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

* ஓசூர் அருகே மோரனப்பள்ளி அருணகிரி லேஅவுட்டை சேர்ந்தவர் மணி, 32. பொக்லைன் டிரைவர். கடந்த, 14ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், குருபராத்தப்பள்ளி அருகே, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மணி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். சூளகிரி போலீசார்

விசாரிக்கின்றனர்.

* பர்கூர் அடுத்த பாசிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 19. அச்சமங்கலம் கூட்ரோட்டில் உள்ள தன் மாமாவின் செருப்பு கடையில் பணிபுரிந்துள்ளார். நேற்று அச்சமங்கலம் கூட்ரோட்டிலிருந்து பாசிநாயனப்பள்ளிக்கு யமஹா பைக்கில் சென்றார். மாலை, 4:30 மணியளவில், பர்கூர் காந்திநகரில், எதிரே ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி பலியானார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us