/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் அண்ணன் உட்பட 3 பேர் சிக்கினர்
/
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் அண்ணன் உட்பட 3 பேர் சிக்கினர்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் அண்ணன் உட்பட 3 பேர் சிக்கினர்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் அண்ணன் உட்பட 3 பேர் சிக்கினர்
ADDED : பிப் 15, 2024 12:38 PM
ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே நடந்த, ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில், அவரது அண்ணன் உட்பட, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ், 35, விவசாயி; ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்; இவரது அண்ணன் மஞ்சுநாத், 41, சூளகிரி அருகே கோனேரிப்பள்ளியில் தங்கி, லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி
வருகிறார்; இவர்களுக்குள் சொத்து பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மதியம் உத்தனப்பள்ளி அடுத்த சானமாவு கிராமம் அருகே, நிலம் சமன்படுத்தும் பணியை பார்வையிட தேவராஜ் சென்றிருந்தார். இதையறிந்த அவரது அண்ணன் மஞ்சுநாத், தன் கூட்டாளிகள் இருவருடன் சென்று, தேவராஜை ஓட ஓட விரட்டி இரும்பு கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டி கொலை செய்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., முரளி தலைமையிலான இரு தனிப்படை போலீசார், தலைமறைமான மஞ்சுநாத் உட்பட மூவரை தேடினர். அப்போது, கெலமங்கலம் அடுத்த கூட்டூர் பகுதியில், மஞ்சுநாத் தன் கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பது தெரிந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், மஞ்சுநாத் மற்றும் கண்ணசந்திரத்தை சேர்ந்த ஸ்ரீநாத், 25, சந்திரசேகர், 34, ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, இன்னோவா கார், இரும்பு கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

