/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூலித்தொழிலாளி சாவில் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சித்தப்பா உட்பட 3 பேர் கைது
/
கூலித்தொழிலாளி சாவில் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சித்தப்பா உட்பட 3 பேர் கைது
கூலித்தொழிலாளி சாவில் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சித்தப்பா உட்பட 3 பேர் கைது
கூலித்தொழிலாளி சாவில் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சித்தப்பா உட்பட 3 பேர் கைது
ADDED : அக் 08, 2024 04:30 AM
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் அருகே, கூலித்தொழிலாளி சாவில் திடீர் திருப்ப-மாக, அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக அவரது சித்தப்பா உட்பட, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஏ.நாகமங்கலத்தை சேர்ந்தவர் மணி-கண்டன், 43, கூலித்தொழிலாளி. கடந்த, 1ல் மாயமானார். அவர் மனைவி வள்ளியம்மாள் பர்கூர் போலீசில் புகாரளித்தார். கடந்த, 3ல், பர்கூர் அருகே நாகமங்கலத்திலுள்ள ஒரு விவசாய கிணற்றில் மணிகண்டன் சடலமாக மிதந்தார். கந்திக்குப்பம் போலீசார் சடலத்தை மீட்டு, அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், கடந்த, 1ம் தேதி மதியம் ஒரு பைக்கில் நால்வர் செல்-வதும், அதில் மணிகண்டனும் இருப்பது தெரிந்தது. மேலும் மணிகண்டனுடன் சென்றது அவரது சித்தப்பா நாகராஜன், 63, அச்சமங்கலம் கூட்டு ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வரும் பழ-னிகுமார், 43, அச்சமங்கலத்தை சேர்ந்த ராஜ்குமார், 35 என தெரிந்தது. அவர்களை போலீசார் விசாரிப்பதற்காக தேடிய நிலையில் மூவரும் நேற்று அச்சமங்கலம் வி.ஏ.ஓ., செல்வராஜ் முன்னிலையில் மணிகண்டனை தாங்கள்தான் கொன்றோம் எனக்-கூறி சரணடைந்தனர். அவர்களை கந்திகுப்பம் போலீசில் ஒப்ப-டைத்தனர்.போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: மணிகண்டன் மனைவி வள்ளியம்மாவுடன், அவரது சித்தப்பா நாகராஜனுக்கு கள்ளத்
தொடர்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி மணிகண்டனும், வள்-ளியம்மாளும் நாகராஜனிடம், 17 லட்சம் ரூபாய் வாங்கியுள்-ளனர். பணத்தை திரும்ப கேட்டபோது மணிகண்டன், 'நீ என் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாய். எதற்காக என்-னிடம் பணம் கேட்கிறாய்' என கேட்டதால் அவர்களுக்குள் தக-ராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நாகராஜன் மணிகண்டனை தீர்த்து கட்ட திட்டம் போட்டார்.
அதன்படி பழனிகுமார், ராஜ்குமார் ஆகியோரை அழைத்து, மணி-கண்டனை தீர்த்து கட்டினால் இருவருக்கும் தலா, ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என கூறினார். அவர் போட்டு கொடுத்த திட்-டப்படி இருவரும், மணிகண்டனை மது குடிக்க அழைத்து சென்-றனர். அப்போது அவரது சித்தப்பா நாகராஜனும் சென்றுள்ளார். நாகமங்கலம் பகுதியிலுள்ள ஒரு விவசாய கிணறு அருகில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது போதையில் இருந்த மணி-கண்டனை, 60 அடி ஆழ கிணற்றுக்குள் தள்ளி கொன்றுள்ளனர். தற்போது போலீசார் இவர்களை தேடிய நிலையில் சரணடைந்-துள்ளனர்.