/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செவிலியரிடம் ரூ.40,000 மோசடி பூசாரி உட்பட 3 பேர் கைது
/
செவிலியரிடம் ரூ.40,000 மோசடி பூசாரி உட்பட 3 பேர் கைது
செவிலியரிடம் ரூ.40,000 மோசடி பூசாரி உட்பட 3 பேர் கைது
செவிலியரிடம் ரூ.40,000 மோசடி பூசாரி உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2025 01:13 AM
ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே, பண மோசடி வழக்கில், கோவில் பூசாரி உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையை சேர்ந்தவர் மாதம்மாள், 55, அரசு மருத்துவமனை செவிலியர். கணவர் பிரிந்து சென்ற நிலையில், மகன், மகளுடன் வசிக்கிறார். பண கஷ்டத்தில் இருந்து வந்தார். தேன்கனிக்கோட்டை அடுத்த பல்கேரி கிராம காளியம்மாள் கோவிலுக்கு சென்றால் மன, பண கஷ்டம் தீரும் எனவும், கோவில் பூசாரி ரவி, குறி சொன்னால்,
அப்படியே நடக்கும் எனவும் நண்பர்கள்
தெரிவித்துள்ளனர்.
அதன்படி மாதம்மாள், அக்கோவிலுக்கு சென்றார். அங்கு வந்திருந்த அஞ்செட்டியை சேர்ந்த பிரபு, நஞ்சுண்டன், 43, அர்த்தகூரை முனிகிருஷ்ணன், 34 ஆகியோர், பூசாரி ரவியிடம் கருப்பு கலர் பணம் உள்ளதாகவும், அதை கெமிக்கல்களில் நனைத்தால், ஒரிஜினல் ரூபாயாக மாறிவிடும், கொடுக்கும் பணத்திற்கு, 2 மடங்கு கருப்புதாளும், கெமிக்கலும் தருகிறோம் என, மாதம்மாளிடம் தெரிவித்துள்ளனர்.
அதை நம்பிய மாதம்மாள் அவர்களிடம் கடந்த ஏப்., 11ல், 40,000 ரூபாய் கொடுத்துள்ளார். அதற்கு, 2 கட்டு கருப்பு தாள்களை கொடுத்த அவர்கள், கெமிக்கலை பிறகு தருவதாக கூறி பணத்தை வாங்கி சென்றனர். அதன்பின் அவர்களை தொடர்பு கொண்டால் சரிவர பதில் கூறவில்லை. மாதம்மாள் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், கோவில் பூசாரி ரவி, 65, நஞ்சுண்டன், 43, முனி
கிருஷ்ணன், 34, ஆகிய மூவரை கைது செய்து, தலைமறைவான பிரபுவை தேடி வருகின்றனர்.