/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வழித்தட தகராறில் பைனான்ஸ்காரரை கொல்ல முயன்ற உறவினர்கள் 3 பேர் கைது
/
வழித்தட தகராறில் பைனான்ஸ்காரரை கொல்ல முயன்ற உறவினர்கள் 3 பேர் கைது
வழித்தட தகராறில் பைனான்ஸ்காரரை கொல்ல முயன்ற உறவினர்கள் 3 பேர் கைது
வழித்தட தகராறில் பைனான்ஸ்காரரை கொல்ல முயன்ற உறவினர்கள் 3 பேர் கைது
ADDED : டிச 20, 2024 12:52 AM
போச்சம்பள்ளி, டிச. 20-
கிருஷ்ணகிரி மாவட் டம், மத்துார் அடுத்த, பெருமாள்குப்பத்தை சேர்ந்தவர் சென்னையன், 63, பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரின் சித்தப்பா மகன்களான நாகராஜ், 80, சென்னையன், 68, நாகராஜின் மகன் மணிகண்டன், 33, ஆகியோருக்கு இடையே, நீண்ட நாட்களாக பூர்வீக சொத்தில் வழிபாத்தியம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சென்னையன் மத்துாரிலிருந்து, தன் வீட்டிற்கு மொபட்டில் சென்றபோது, மாடரஹள்ளி ஆற்றுப்பாலம் அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அரிவாளால் சென்னையனை சரமாரியமாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சென்னையன் கூச்சலிடவே, அங்கு கூடிய மக்களால், மர்ம நபர்கள் அரிவாளை வீசி விட்டு தப்பினர்.
மத்துார் போலீசார் விசாரணையில், சொத்து தகராறில் பெரியப்பா மகனை, கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்தது தெரிந்தது. இதைடுத்து நாகராஜ், சென்னையன், மணிகண்டன் ஆகிய மூவரை கைது செய்தனர். காயமடைந்த சென்னையன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.