/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண் கடத்திய 3 டிப்பர் லாரி பறிமுதல்
/
மண் கடத்திய 3 டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜூலை 28, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறை அலுவ-லர்கள், மத்திகிரி கூட்ரோட்டில் இருந்து, அந்திவாடி கூட்ரோடு செல்லும் சாலையிலுள்ள செவன்த் டே பள்ளி அருகே, நேற்று முன்தினம் காலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மொத்தம், 20 யூனிட் எம்.சாண்டை, கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு செல்வது தெரிந்தது.
இதனால், லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். தாசில்தார் குணசிவா புகார் படி, மத்-திகிரி போலீசார் வழக்குப்பதிந்து, லாரிகளின் டிரைவர்கள், உரி-மையாளர்களை தேடி வருகின்றனர்.