ADDED : அக் 16, 2026 03:21 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த பல்லூர் கூட்ரோடு அருகே நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் சென்ற ஒரு டிப்பர் லாரியை மடக்கி சோதனை இட்டதில், 3.5 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து ஜூஜூவாடி வி.ஏ.ஓ., திம்மராயன் அளித்த புகார் படி ஓசூர் சிப்காட் போலீசார் லாரியை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், பன்னார்கட்டாவை சேர்ந்த மது, 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். அதேபோல, பெலத்துார் அருகே நின்ற இரு லாரிகளில், 8 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து, பெலத்துார் வி.ஏ.ஓ., மூர்த்தி புகார் படி, பாகலூர் போலீசார், 2 லாரிகளை பறிமுதல் செய்து லாரியின்
உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
