/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 30 யானைகள்; வனத்துறை எச்சரிக்கை
/
கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 30 யானைகள்; வனத்துறை எச்சரிக்கை
கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 30 யானைகள்; வனத்துறை எச்சரிக்கை
கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 30 யானைகள்; வனத்துறை எச்சரிக்கை
ADDED : நவ 03, 2024 02:47 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்., மாதம்,
150 க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டத்திற்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்-கான இடம் பெயர்வு துவங்கிய நிலையில், 30 க்கும் மேற்பட்ட யானைகள், கர்நாடகா மாநில வனப்பகுதியில் இருந்து வெளி-யேறி, தளி, நொகனுார் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதனால், ஜவளகிரி, நொகனுார், அகலக்கோட்டை, பாலதொட்டனப்பள்ளி, மேடுமுத்-துக்கோட்டை, கண்டகானப்பள்ளி ஆகிய கிராம மக்கள் அச்சம-டைந்துள்ளனர்.
இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், விவ-சாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்-றன. அதனால், விவசாயிகள் இரவில் தோட்டங்களுக்கு காவ-லுக்கு செல்ல வேண்டாம் என்றும், வனப்பகுதிக்குள் விறகு சேக-ரிக்கவோ, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கோ ஓட்டி செல்ல வேண்டாம் எனவும், வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.