/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரலட்சுமி நோன்பையொட்டி கனகாம்பரம் கிலோ ரூ.3,000
/
வரலட்சுமி நோன்பையொட்டி கனகாம்பரம் கிலோ ரூ.3,000
ADDED : ஆக 16, 2024 05:21 AM
ஓசூர்: ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
வரலட்சுமி நோன்பு மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓசூர் பகுதியில், 5 ஏக்கரில் விவசாயிகள் பூ சாகுபடி செய்திருந்தனர். இன்று வரலட்சுமி நோன்பையொட்டி, நேற்று ஓசூர் மலர் சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதை வாங்க ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர். கடந்த வாரத்தை விட நேற்று பூக்களின் விலை உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம், ஒரு கிலோ குண்டுமல்லி பூ, 1,000 ரூபாய் என விற்ற நிலையில் நேற்று, 1,800 ரூபாய்க்கும், முல்லை, 1,300ல் இருந்து, 1,600 ரூபாய் எனவும், கனகாம்பரம், 2,400 ரூபாய் என விற்றது நேற்று, 3,000 ரூபாய் என விற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

