/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிலக்கடலை, ராகி பயிர்களுக்கு காப்பீடு செய்ய 31 கடைசி நாள்
/
நிலக்கடலை, ராகி பயிர்களுக்கு காப்பீடு செய்ய 31 கடைசி நாள்
நிலக்கடலை, ராகி பயிர்களுக்கு காப்பீடு செய்ய 31 கடைசி நாள்
நிலக்கடலை, ராகி பயிர்களுக்கு காப்பீடு செய்ய 31 கடைசி நாள்
ADDED : டிச 14, 2024 01:33 AM
கிருஷ்ணகிரி, டிச. 14-
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டில் நவரை பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை, ராகி பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், காப்பீடு செய்ய வரும், 31 கடைசி நாளாகும். இத்திட்டதில் கடன் பெறும், கடன் பெறா விவசாயிகள், பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக நிலக்கடலை மற்றும் ராகி பயிருக்கு, 21 ஆயிரத்து, 300 ரூபாய் வழங்கப்படும். விதைப்பு முதல்
அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கு, பிர்கா வாரியாக சோதனை அறுவடை செய்து, இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அருகில் உள்ள மக்கள் கணினி மையங்களை அணுகி, நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு, 320 ரூபாய், ராகி பயிருக்கு, 171 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

