/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பயிர் காப்பீட்டு திட்டத்தில் 3,290 பேர் விண்ணப்பம்
/
பயிர் காப்பீட்டு திட்டத்தில் 3,290 பேர் விண்ணப்பம்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் 3,290 பேர் விண்ணப்பம்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் 3,290 பேர் விண்ணப்பம்
ADDED : பிப் 09, 2024 11:35 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், ராபி பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சம்பா பருவத்தில் நெற் பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டு, 15 பிர்க்காக்களில் விரிவான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி, 881 விவசாயிகளின், 1,111 ஏக்கர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும், ராபி பருவத்தில் நிலக்கடலை பயிருக்கு அறிவிப்பு
செய்யப்பட்ட, 8 பிர்க்காவில் விரிவான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி, 692 விவசாயிகள், 612
ஏக்கர்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
நவரை நெற்பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்ட, 16 பிர்க்காக்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி, 1,797 விவசாயிகள், 1,084 ஏக்கர் என இந்த ஆண்டு, 3,290 விவசாயிகள், 2,807 ஏக்கர்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
நெற்பயிருக்கு பிரீமியம் தொகை, 550.50 ரூபாய், இழப்பீட்டுத்தொகை, 36,700 ரூபாய், நிலக்கடலை பயிருக்கு பிரிமீயம் தொகை, 311.25 ரூபாய் இழப்பீட்டுத் தொகை, 20,750 ரூபாய். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

