/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
333 பஞ்.,ல் நாளை கிராம சபை கூட்டம்
/
333 பஞ்.,ல் நாளை கிராம சபை கூட்டம்
ADDED : அக் 31, 2025 12:41 AM
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை, 333 பஞ்.,களிலும் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 333 கிராம ஊராட்சிகளிலும் நாளை (நவ.1) சனிக்கிழமை காலை, 11:00 மணியளவில், உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபைக்கூட்டம் நடக்க உள்ளது.
கூட்டத்தை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கூட்டம் சிறப்பாக நடக்க அனைத்து  தனி அலுவலர் மற்றும் பி.டி.ஓ.,க்கள் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க மாவட்ட அளவிலான அலுவலர்கள், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

