/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருவேறு சாலை விபத்தில் விவசாயி உட்பட இருவர் பலி
/
இருவேறு சாலை விபத்தில் விவசாயி உட்பட இருவர் பலி
ADDED : அக் 31, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி தாலுகா, பட்டானுாரை சேர்ந்தவர் விஜய், 29,  கட்டட தொழிலாளி. இவர், கடந்த, 28 மாலை, பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார். வெப்பாலம்பட்டி அருகே போச்சம்பள்ளி - சந்துார் சாலையில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதி பலியானார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
* தளி அடுத்த சின்ன மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் கோபால், 61, விவசாயி. நேற்று முன்தினம் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் சென்றார். காலை, 11:30 மணி முதல் உளிவீரனப்பள்ளி அருகே தளி - ஓசூர் சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த ஈச்சர் லாரி மோதியதில் பலியானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

