/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்து 34 தொழிலாளர்கள் காயம்
/
தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்து 34 தொழிலாளர்கள் காயம்
தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்து 34 தொழிலாளர்கள் காயம்
தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்து 34 தொழிலாளர்கள் காயம்
ADDED : ஆக 06, 2025 01:14 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட் டம், குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளியில், தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு திருப்பத்துார், கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தினமும் நிறுவன பஸ்சில் பணிக்கு வந்து, செல்வது வழக்கம். இந்நிலையில் திருப்பத்துார் மாவட்டம் குனிச்சியில் இருந்து போலுப்பள்ளி தனியார் நிறுவனத்திற்கு, ஊழியர்களை ஏற்றிக்கொண்டு நிறுவன பஸ் நேற்று காலை புறப்பட்டது.
பஸ்சை திருப்பத்துார் மாவட்டம் நாயக்கனுார் அருகே உள்ள மங்களப்பட்டியை சேர்ந்த சீனிவாசன், 40 என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில், 53 பேர் இருந்தனர். பஸ், குனிச்சியில் புறப்பட்டு, திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலை பெரியபனகமுட்லு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற பிக்கப்வேன் மீது மோதாமல் இருக்க, பஸ்சை டிரைவர் திருப்பியபோது, சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதில், பஸ்சிலிருந்த, 34 தொழிலாளர்கள் லேசான காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் அனைவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.