/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் 34வது பட்டமளிப்பு விழா
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் 34வது பட்டமளிப்பு விழா
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் 34வது பட்டமளிப்பு விழா
ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் 34வது பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 27, 2025 03:57 AM
ஓசூர்: ஓசூர், எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், 34வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார்.
சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் அருள்வாசு, இளநி-லையில், 744 பேர், முதுநிலையில், 132 பேர் என, 876 மாணவ, மாணவியருக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், ''மாணவர்கள் முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும். சகிப்புத்-தன்மையும், அனுபவங்களையும் உங்கள் ஆசிரியர்களிடம் இருந்து கற்று கொள்ளுங்கள். அறிவும், அனுபவமும் சேர்ந்து செயல்பட்டால், வாழ்வில் வெற்றி பெறலாம். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு மிகவும் அவசியம். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்,'' என்றார்.பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் வென்ற உயிரி வேதியல் துறை மாணவி பாவனா மற்றும் உயிரி தொழில்நுட்ப-வியல் துறை மாணவி நீரஜா ஸ்ரீ மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன. கல்லுாரி நிறுவனர் தம்பிதுரை எம்.பி., அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை, அறங்காவலர் லாசியா தம்பிதுரை, துணைத்-தலைவர் சுரேஷ் பாபு, அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி மேலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

