/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணம் அருகே லாரியில் கடத்த முயன்ற 35 எருமை மாடுகள் பறிமுதல்
/
காவேரிப்பட்டணம் அருகே லாரியில் கடத்த முயன்ற 35 எருமை மாடுகள் பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே லாரியில் கடத்த முயன்ற 35 எருமை மாடுகள் பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே லாரியில் கடத்த முயன்ற 35 எருமை மாடுகள் பறிமுதல்
ADDED : ஆக 02, 2024 11:55 PM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே ஆந்திராவிலிருந்து பொள்ளாச்சிக்கு கடத்த முயன்ற, 35 எருமை மாடுகளை போலீசார் பறிமுதல் செய்-தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சவுட்ட-ஹள்ளி அருகே நேற்று காலை, 6:30 மணிக்கு, கிருஷ்ணகிரி - தர்-மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி சென்றது.
அந்த லாரியை காரில் பின்தொடர்ந்து வந்த, 4 பேர் கும்பல் வழிமறித்து நிறுத்தியது. லாரியில், 35 எருமை மாடுகள் இருந்தன. காவேரிப்-பட்டணம் போலீசார் அங்கு சென்று லாரியுடன் எருமை மாடு-களை பறிமுதல் செய்தனர்.லாரியை ஓட்டி வந்தவர் கேரள மாநிலம், கொல்லங்கோட்டை சேர்ந்த கிரிஷ், 43, என்பதும், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து, 35 எருமை மாடுகளை பொள்ளாச்சி சந்தையில் விற்பதற்-காக, கிருஷ்ணகிரி வழியாக சென்றதும் தெரிந்தது. அவருடன் லாரியில் கிளீனராக கோயம்புத்தூர் அடுத்த ராமபட்டிணத்தை சேர்ந்த ஆறுமுகம், 48, ம் வந்துள்ளார். இவர்களை அடையாளம் தெரியாத, 4 பேர் காரில் வந்து மிரட்டி வாகனத்தை நிறுத்தியதா-கவும், கொலை மிரட்டல் விடுதத்தாகவும், கடந்த, வாரத்தில் கேரள லாரி டிரைவர் கிருஷ்ணகிரியில் அடித்து கொல்லப்பட்டது போல் தன்னையும் கொல்ல முயன்றதாக புகாரளித்தனர்.இதனிடையே காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, வி.சி., கட்சி, இந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகம், த.வா.க., நிர்-வாகிகள் வந்து லாரியுடன் மாடுகளை விடுவிக்க கோரி வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர்.காவேரிப்பட்டணம் போலீசாரின் விசாரணையில் லாரியை மடக்-கியவர்கள், ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த அகில பாரத இந்து மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சிலம்பரசன் என்பதும், உடன் வந்தவர்கள் அவர்களது கட்சியை சேர்ந்த மூவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அளித்த தகவல்படி, கால்நடை மருத்துவர் முரளி கொடுத்த புகார்படி மாடுகளை கடத்தியதாக மிருக வதை தடுப்பு சட்-டத்தில், லாரி டிரைவர் கிரிஷ், மற்றும் மாடுகளை கடத்த முயன்ற, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. லாரியை தன்னிச்சையாக மடக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கிரிஷ் கொடுத்த புகார்படி அகில பாரத இந்து மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட, நால்வர் மீதும் வழக்கு பதிந்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.