/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருவிழாக்களில் டூவீலர் திருடியகல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
/
திருவிழாக்களில் டூவீலர் திருடியகல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
திருவிழாக்களில் டூவீலர் திருடியகல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
திருவிழாக்களில் டூவீலர் திருடியகல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது
ADDED : ஆக 21, 2025 01:55 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, குள்ளனுார், தேன்காரன்கொட்டாயில் கடந்த, 17ல் மாரியம்மன் திருவிழா நடந்தது. அப்போது, 2 டூவீலர்கள் திருட்டு போனது. புகார் படி போச்சம்பள்ளி போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். இதில், திருப்பத்துார் மாவட்டம், பச்சூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வரும், 18, 16, 17 வயதுடைய மாணவர்கள் என தெரிந்தது.
அவர்கள், கூட்டாக சேர்ந்து, பஜாஜ் பல்சர், டி.வி.எஸ்., சூப்பர் மேக்ஸ் டூவீலர்களை திருடியது தெரிய வந்தது. போச்சம்பள்ளி போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்ததில், அவர்கள் நால்வரும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில், தொடர்ந்து டூவீலர் திருட்டில் ஈடுபட்டு தெரிய வந்தது.