ADDED : ஜூன் 21, 2026 04:27 AM
பாகலுார்: ஓசூர் அருகே, பெலத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சோமசேகர், 25, விவசாயி; கடந்த, 14ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சாலையில், தன் பைக்கில் கால்நடை தீவன புல்லை கட்டி கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற பாகலுாரை சேர்ந்த நாகராஜ், 27, என்பவர், புல்லின் மீது உரசி சென்றார். இதனால் சோமசேகர் அவரிடம் கேள்வி எழுப்பவே, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்-டது.ஆத்திரமடைந்த நாகராஜ், தன் நண்பர்களுடன் சேர்ந்து, சோமசேகரை தகாத வார்த்தையால் திட்டி, பீர்பாட்டிலால் தாக்கினார்.
இதில் காயமடைந்த அவர் புகார் படி, நேற்று முன்தினம் வழக்குப்பதிந்த பாகலுார் போலீசார், நாகராஜ் மற்றும் பாகலுார் தேர்ப்பேட்டையை சேர்ந்த சல்மான், 30, பாகலுார் கோட்டை எம்.ஜி., ரோட்டை சேர்ந்த அபி, 25, கோட்டையை சேர்ந்த ஈஸ்வர், 31, ஆகிய, 4 பேரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
