தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்


ADDED : ஜூன் 21, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: நாடு முழுவதும், 'பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா' திட்டத்தில், தொழிலா-ளர்கள், தொழில்முனைவோருக்கு ஊக்கத்-தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் அலுவலகத்தில், இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 மாதங்களுக்கு மேல், ஒரே நிறுவனத்தில் பணி-யாற்றும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்-கப்பட்டன. அதேபோல், தொழிலாளர்களை அதிக-ளவில் வேலைக்கு எடுத்து, 6 மாதமாக மேலாக பணி வழங்கும் தொழில்முனைவோரை ஊக்கு-விக்கும் வகையிலும், அவர்களுக்கு ஊக்கத்தொ-கைகள் வழங்கப்பட்டன.ஒவ்வொரு தொழிலாளியும், அவர்கள் வாங்கும் ஊதியத்தை பொருத்து, அதிகபட்சமாக, 15,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை பெற முடியும். அது இரு தவணையாக வழங்கப்படும் என, நிகழ்ச்-சியில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் தவணை நேற்று, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், 20 தொழிலாளர்க-ளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இவற்றை, ஓசூர் தொழிலபதிபர் சுதா நாகராஜன், ஓசூர் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் அருளானந்தம், ஹோஸ்டியா சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் வடிவேல் உட்பட பலர் வழங்-கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us