தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தோட்டக்கலை சார்ந்த படிப்பை தேர்வு செய்ய ஆலோசனை

தோட்டக்கலை சார்ந்த படிப்பை தேர்வு செய்ய ஆலோசனை

தோட்டக்கலை சார்ந்த படிப்பை தேர்வு செய்ய ஆலோசனை


ADDED : ஜூன் 21, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகலுார்: ''தோட்டக்கலை சார்ந்த படிப்புகளை மாண-வர்கள் தேர்வு செய்யலாம்,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆலோசனை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே ஜீமங்கலத்தில் உள்ள ஏசியன் கிறிஸ்-டியன் பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், உயர்கல்வி வழி-காட்டி விழிப்புணர்வு மற்றும் நேரடி சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது.இதை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு உயர்-கல்வி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கி, அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்-டணம், பர்கூர், வேப்பனஹள்ளி, ஓசூர், சூளகிரி ஒன்றியங்களை சேர்ந்த, அரசு மேல்நிலைப்பள்-ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, உயர் கல்-வியில் சேர்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில், 6 ஒன்றியங்களை சேர்ந்த மொத்தம், 392 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

அதில், 58 பேருக்கு உடனடியாக உயர்கல்வி சேர்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தளியில் தோட்டக்கலைத்துறை சார்பில், 3 ஆண்டு டிப்ளமோ படிப்பான, வாழை, மூங்கில் போன்ற திசு வளர்ப்பு படிப்புகள் உள்ளன. திசு வளர்ப்பு படிப்பின் மூலம், பெரிய நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலை சார்ந்த காய்கறிகள், மலர் உற்பத்தியில் சிறந்து விளங்கு-கிறது. அதனால், தோட்டக்கலை சார்ந்த படிப்பு-களை மாணவர்கள் தேர்வு செய்யலாம். மேலும், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்வி படிப்பதன் மூலம், எதிர்காலத்தில் நல்ல வேலை-வாய்ப்புகளை பெற முடியும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us