தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் காயில் திருட்டு

டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் காயில் திருட்டு

டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் காயில் திருட்டு


ADDED : ஜூன் 21, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த குந்துமாரனப்பள்ளி பஞ்., உட்பட்ட போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 60, விவசாயி. இவரது குடும்பத்தினர் அப்பகுதியில், 25 ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர். விவசாய தேவைக்-காக கடந்தாண்டு, 5 லட்சம் ரூபாய் செலவு செய்து, மின்வாரியம் மூலம் அப்பகுதியில், 13 மின்கம்-பங்கள் நட்டு, டிரான்ஸ்பார்மர் ஒன்றை அமைத்-தனர்.

நேற்று முன்தினம் இரவு, டிரான்ஸ்பார்மரை உடைத்த மர்ம நபர்கள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி சென்றனர். இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில் மின்வாரியம் சார்பில் புகார் செய்யப்-பட்டுள்ளது.தேன்கனிக்கோட்டை தாலுகாவில், மர்மநபர்கள் அவ்வப்போது டிரான்ஸ்பார்மரை உடைத்து, காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி செல்லும் சம்பவம் அரங்கேறி வருவது குறிப்பி-டத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us