ADDED : டிச 07, 2025 08:53 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்த குன்னத்துாரை சேர்ந்தவர் பிரகாஷ், 38, கட்டட மேஸ்திரி. கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவ-ரது உறவினர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பர்கூர், கிருஷ்ணசாமி செட்டி தெருவை சேர்ந்-தவர் ஆசிப், 40, பிரியாணி மாஸ்டர். கடந்த, 26ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாய-மானார். அவரது உறவினர் புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி அருகில் உள்ள பகுதியை சேர்ந்-தவர், 17 வயது முதலாமாண்டு கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின்
பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ண-கிரி அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்த பவுன்ராஜ், 22, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக
தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் விசா-ரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த, 13 வயது சிறுமி. அரசு உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 4ம் தேதி மதியம், 1:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற மாணவி
திரும்பி வரவில்லை. அவரது அண்ணன் புகார் படி, மத்தி-கிரி போலீசார் தேடி வருகின்றனர்.

