/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
௨ இளம்பெண்கள் உட்பட 4 பேர் மாயம்
/
௨ இளம்பெண்கள் உட்பட 4 பேர் மாயம்
ADDED : செப் 22, 2024 05:22 AM
கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த கொக்காரப்பட்டியை சேர்ந்தவர் அம்மு, 23. கடந்த, 16ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் நேற்று முன்தினம் மத்துார் போலீசில் புகாரளித்தனர். அதில், சிவா என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்துார் அடுத்த கணுக்கனுாரை சேர்ந்தவர் மீனா, 24, கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அப்பெண்ணின் கணவர் இதுகுறித்து மத்துார் போலீசில் புகாரளித்தார். அதில், கொடமாண்டப்பட்டியை சேர்ந்த அருள் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி காந்தி நகரை சேர்ந்தவர் விவேகானந்தன், 55, பில்டிங் கான்டிராக்டர். இவர், கடந்த 20ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார், அவர் மனைவி புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
* தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது மாணவி, ஓசூர் தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 16 மாலை, 4:30 மணிக்கு, ஓசூர் சின்ன எலசகிரியில் உள்ள தன் உறவினர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த மோகன்குமார், 21, மீது சந்தேகம் இருப்பதாக
குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.