/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 4 பேர் பலி
/
வெவ்வேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 4 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 4 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 4 பேர் பலி
ADDED : ஜூலை 20, 2025 08:01 AM
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தலுாரை சேர்ந்தவர் கணேசன், 43, தனியார் நிறுவன ஊழியர். பெங்களூரு கலாசிபாளையா பகுதியில் தங்கியிருந்தார். கடந்த, 17 மாலை ஜூபிடர் ஸ்கூட்டரில் சென்றார். ஓசூரில், ரிங் ரோட்டில் சென்றபோது, அவ்வழியாக சென்ற டேங்கர் லாரி மோதியதில் கணேசன் பலியானார். ஓசூர் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி, 58. விவசாயி. கடந்த, 18 இரவு டி.வி.எஸ்., மொபட்டில் கம்மம்பள்ளி அரசு பள்ளி அருகே குப்பம் - கிருஷ்ணகிரி சாலையில் சென்றார். அவ்வழியாக சென்ற ஸ்பிளண்டர் பைக் மோதி பலியானார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டியை சேர்ந்தவர் ரவி, 48. ஆட்டோ டிரைவர். கடந்த, 18 மதியம் குருபரப்பள்ளி தனியார் நிறுவனம் அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில், ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில் பலியானார். குருபரப்பள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.
* மத்துார் அடுத்த கரடிகொல்லப்பட்டியை சேர்ந்தவர் குமரன், 22, டிரைவர். இவர், கடந்த 17ல் மதியம் 2:30 மணியளவில், கண்ணன்டஹள்ளி அருகே திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் ஹீரோ டீலக்ஸ் பைக்கில் சென்றபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.