/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு இடங்களில் விபத்து வியாபாரி உட்பட 4 பேர் பலி
/
வெவ்வேறு இடங்களில் விபத்து வியாபாரி உட்பட 4 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் விபத்து வியாபாரி உட்பட 4 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் விபத்து வியாபாரி உட்பட 4 பேர் பலி
ADDED : ஜூலை 27, 2025 01:00 AM
ஓசூர் :ஓசூர் அருகே, எடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 42. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே பூ கடை வைத்து இருந்தார். நேற்று மாலை, 4:10 மணிக்கு, தளி சாலையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றார். அந்திவாடி விளையாட்டு மைதானம் எதிரே, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த ரமேஷ் மீது, லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில், உடலின் பாதி பகுதி நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
* கர்நாடகா மாநிலம், மாரநாயக்கனஹள்ளி மற்றும் ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே, ரயில்வே தண்டவாளத்தில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு ஒருவர் இறந்து கிடந்தார். ஓசூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தபோது, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ரயில் மோதி
உயிரிழந்தது தெரிந்தது.
*சவுளூரை சேர்ந்தவர் சக்திவேல், 35, பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் அவதானப்பட்டி அருகே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மோதி பலியானார். கே.ஆர்.பி., டேம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த எல்லைக்கொட்டாயை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 65. விவசாயி. இவர் குட்டூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ், மோதி
பலியானார்.