/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கைக்குழந்தையுடன் பெண் உட்பட 4 பேர் மாயம்
/
கைக்குழந்தையுடன் பெண் உட்பட 4 பேர் மாயம்
ADDED : நவ 21, 2024 01:17 AM
கைக்குழந்தையுடன்
பெண் உட்பட 4 பேர் மாயம்
கிருஷ்ணகிரி, நவ. 21-
போச்சம்பள்ளி அடுத்த அவலக்கம்பட்டியை சேர்ந்தவர் சினேகா, 20. இவர், கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு, தன், 8 மாத குழந்தையுடன் கடந்த, 18ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் மதுமணி நேற்று முன்தினம் அளித்த புகார்படி போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊத்தங்கரை அடுத்த கருக்கம்பட்டியை சேர்ந்தவர் அகிலா, 19, மூன்றாம் ஆண்டு கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் கல்லுாரியில் இருந்து திரும்பியவர் அனுமந்திருத்தம் பஸ் ஸ்டாப்பில் சோகமாக நின்றுள்ளார். அதன் பின் மாயமானார். மாணவியின் தந்தை புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஓசூர் அருகே, சிங்கசாதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராமப்பா, 64. விவசாயி; கடந்த மாதம், 27 இரவு, 7:00 மணிக்கு விவசாய பணியை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரது மனைவி உணவு தயார் செய்யாததால் கேள்வி எழுப்பினார். அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் விரக்தியடைந்த ஜெயராமப்பா வீட்டிலிருந்து வெளியே சென்றார். அவர் திரும்பி வராததால், அவரது மகன் நாகேஷ், 30, கொடுத்த புகார் படி, பாகலுார் போலீசார், அவரை தேடி வருகின்றனர்.