/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.சாண்ட் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
/
எம்.சாண்ட் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
ADDED : செப் 20, 2025 01:30 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகேந்திரா ேஷாரூம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த இரு லாரிகளில் சோதன செய்த போது, ஒரு லாரியில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 4 யூனிட் எம்.சாண்ட் மற்றும் மற்றொரு லாரியில், 8 யூனிட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது.
இரு லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஹட்கோ போலீசில் ஒப்படைத்தனர்.உத்தனப்பள்ளி-ஓசூர் சாலையில் உள்ள அகரம் பகுதியில், தியானதுர்க்கம் வி.ஏ.ஓ., செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஓசூரிலிருந்து தர்மபுரிக்கு, மூன்றரை யூனிட் எம்.சாண்டை கொண்டு சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு, உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்
வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது, 6 யூனிட் எம்.சாண்டை பெங்களூருவிற்கு கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர்.