/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மணல், கற்கள் கடத்தல் 4 லாரிகள் பறிமுதல்
/
மணல், கற்கள் கடத்தல் 4 லாரிகள் பறிமுதல்
ADDED : ஆக 22, 2025 01:59 AM
ஓசூர், கிருஷ்ணகிரி அருகே, தேவசமுத்திரம் வி.ஏ.ஓ., சீதா மற்றும் அலுவலர்கள் அவதானப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண், மோட்டூரில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு கடத்த முயன்றது தெரிந்தது. சீதா புகார் படி, கே.ஆர்.பி., டேம் போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.
சூளகிரி போலீசார் காமன்தொட்டி தட்சிண திருப்பதி கோவில் அருகில் வாகன சோதனை நடத்தினர். அங்கு நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். ஊத்தங்கரை வி.ஏ.ஓ., தேவராஜ் மற்றும் அலுவலர்கள் திருவண்ணாமலை சாலையில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது.- ஊத்தங்கரை போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.
கண்ணன்டஹள்ளி வி.ஏ.ஓ., சம்சுதீன் மற்றும் அலுவலர்கள் கூச்சூர் மின்வாரிய அலுவலகம் அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது-. சம்சுதீன் புகார் படி, மத்துார் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.